Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஒலிம்பிக் இசை அமைப்புக் குழு ஆலோசகர் திடீர் பதவி விலகல்
[02 - March - 2008] [Font Size - A - A - A]
சீனாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியின் ஆரம்ப வைபவத்துக்கும், இறுதி வைபவத்துக்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட, உலக முதல் தரப் பாடகர்கள் இந்த இசை நிகழ்ச்சிகளிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார்கள். ஒலிம்பிக் குழுவில் கலை ஆலோசகராக இருந்த பிரபல கொலிவூட் இசை அமைப்பாளரான ஸ்ரிபேக் ஸ்ரீவன் ஒலிம்பிக் இசைக் கலை ஆலோசகர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஒலிம்பிக் அமைப்புக் குழுவுக்கு அறிவித்துள்ளார். தான் பதவியிலிருந்து விலகுவது குறித்து கீழ்க் கண்டவாறு விளக்கமும் அளித்துள்ளார்.

சூடானின் தாகூர் பகுதியில் கட்டுக்கடங்காத இனப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும், சூடான் அரசுக்கு, சீன அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கிக் கொண்டு வருவதனால் கலை ஆலோசகர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு எனது மனச்சாட்சி இடமளிக்கவில்லை. இனப்படு கொலைக்கு ஆதரவு வழங்கிவரும் சீனா, நடத்தவிருப்பது `இனப்படுகொலை ஒலிம்பிக் போட்டி' என்றே கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்தப் பதவி விலகலை அடுத்து ஒலிம்பிக் போட்டியில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த பல கொலிவூட் பாடகர்களும், நடிகர், நடிகைகளும், ஒலிம்பிக் இசைக்குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Email this page Your Opinion Print this page
அவுஸ்திரேலிய - இந்திய அணிகளிடையேயான முதலாவது இறுதி ஆட்டம் இன்று
ஒலிம்பிக் இசை அமைப்புக் குழு ஆலோசகர் திடீர் பதவி விலகல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com