* பாஹிம் தெரிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி சர்தாரியின் பெயரை தான் முன்மொழிவதாக தெரிவித்துள்ள கட்சியின் துணைத் தலைவர் மஹ்தும் அமின் பாஹிம் அவர் போட்டியிட தவறினால் தான் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
சர்தாரியை சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்தாரி போட்டியிடாமல் வேறு யாரையாவது நியமித்தால் அவரை எதிர்த்து தான் போட்டியிடப் போவதாக பாஹிம் தெரிவித்தார்.
பிரதமர் பதவி போட்டியிலிருந்து பாஹிம் விலகிக் கொண்டால் அவர் நியமிக்கும் 3 பேருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்குவதாகவும் 6 பேருக்கு சிந்து மாநில அமைச்சுப் பதவியை வழங்குவதாகவும் சர்தாரி கூறியதை பாஹிம் ஏற்க மறுத்துள்ளார்.
இச் சந்திப்பின் போது இணக்கப்பாடு எதுவும் ஏற்படாததால் இவர்களிருவரும் மீண்டும் சந்திக்க தீர்மானித்துள்ளனர்.