* சீனப் பிரதமர்
திபெத் போராட்டக்காரர்களை இந்தியா கையாண்ட விதம் பாராட்டுக்குரியது என்று சீனாவின் பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்தார்.
இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த வென்;
திபெத் பிரச்சினை இந்திய - சீன உறவில் மிகவும் சிக்கலான பிரச்சினை என்றார். மேலும் திபெத் பிரச்சினையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றும் என்று நம்புவதாகவும் வென் கூறினார்.
திபெத் விவகாரத்தில் இந்தியா மிகவும் கவனத்துடன் செயற்படுகிறது என்று இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திபெத்தியர்களை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.