Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆளும் கூட்டணியில் த.ம.வி.பு.வை இணைக்க முஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள் ஆட்சேபனை
[20 - March - 2008] [Font Size - A - A - A]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில், அக்கூட்டணியில் இணைவதற்கு முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளன.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்திலேயே முஸ்லிம் மற்றும் இடதுசாரி கட்சிகள் தமது தயக்கத்தை நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிராக ஆயுதக் குழு என்ற குற்றச்சாட்டு நிலவுகையில் அரசாங்கத் தரப்புடன் கூட்டுச் சேர்வது பாதகமான விளைவை ஏற்படுத்துமெனவும் இதன்போது கட்சிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆளும்தரப்பு ஆயுதக் குழுவுடன் இணைந்து போட்டியிடுகின்றமையானது முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்க வேண்டியேற்படுமென எச்சரித்துள்ளதாக அறியவருகிறது.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றமைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஏற்படும் பாதகங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய கூட்டணி குறித்த முதற் கூட்டத்திலேயே இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடதுசாரிக் கட்சிகள் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் அறியவருவதாவது; ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஆயுதக் குழுக்கள் எவையேனும் கூட்டுச்சேரும் பட்சத்தில் இடதுசாரிக் கட்சிகள், அமைச்சர் டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கட்சிக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிஷாட்

இதேவேளை, எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கவனத்திற்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட முன் வருமாறும் அரசில் அங்கம்வகிக்கும் சகல கட்சிகளும் காங்கிரஸின் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கடந்த இரு தசாப்த அரசியல் வரலாற்றில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வந்த இன்னல்கள், துன்பங்கள், உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள், இடம்பெயர்வுகள் கறை படிந்த நிகழ்வுகளையே ஏற்படுத்தியுள்ளதை நாம் மறந்துவிட முடியாது.

இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதிருக்க வேண்டுமென்பதில் அரசில் பங்காளியாக இருக்கும் எமது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் ஏகோபித்த கருத்துடன் காணப்படும் இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பிரித்து தொடர்ந்தும் அம்மக்களது உரிமைகளை கேள்விக் குறியாக்கும் நிலையை உருவாக்க நினைக்கக்கூடாது.

முஸ்லிம் சமூகத்தின் முகவரிக்காக தன்னைத் தியாகம் செய்த முதுபெரும் பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் கனவை நனவாக்க எமது தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதால் முஸ்லிம்களின் ஒற்றுமையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வர வேண்டும் என அவர் மேலும் இந்த செய்திக் குறிப்பில் கேட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஆர்தர் சி கிளார்க் காலமானார்
காணாமல் போதல்; வெளிவிவகார அமைச்சை சாடுகிறது ஐ.சி.ஆர்.சி.
பாரிய கூட்டணியில் மு.கா. வை இணைத்து கிழக்கில் களமிறங்க ஐ.ம.சு.மு. தீவிர முயற்சி
போட்டியிடாவிடினும் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே
ஆளும் கூட்டணியில் த.ம.வி.பு.வை இணைக்க முஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள் ஆட்சேபனை
கிழக்கு மாகாண தேர்தல் போட்டி குறித்து இன்று தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும்மழை மண்சரிவு அபாயம்; இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்கும்
கொள்ளுப்பிட்டி வீதி விபத்தில் 2 விமானப் படையினர் காயம்
சீன அரசாங்கத்தின் இலங்கைக்கான உதவிகள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு குறித்து அறிவுறுத்தல்
பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் படுகொலைகள் எவ்வாறு இடம்பெற்றன
டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி பெண் உட்பட இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
ரூபவாஹினிக்கு எதிரான வழக்கில் இணக்கத்துக்கு வர காதர் எம்.பி.சம்மதம்
விஷேட அதிரடிப்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கேள்விகள் நீதியற்றவை
உயிர்த்த ஞாயிறு தினம் யாழில் ஊரடங்கு நீக்கம்
மீளக் குடியமர விரும்புவோரை உறுதிகளை சமர்ப்பிக்க கோரிக்கை
கொழும்பு, மட்டக்களப்பில் இரு பெண்களை காணவில்லை
மயிலவெட்டுவான், செங்கலடி பிரதேசங்களை மக்கள் சென்று பார்வையிட ஏற்பாடு
உலகு எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு நபிகளாரின் போதனைகளில் தீர்வுண்டு
சகல இனத்தாருடனும் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைத்து முஸ்லிம்களும் உறுதி பூணவேண்டும்
மட்டக்களப்பில் அடைமழையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க கோரிக்கை
பேரியல் அஷ்ரப்பின் மீலாதுன் நபி வாழ்த்து
சித்திரை மாதப்பிறப்பே புத்தாண்டு அகில இலங்கை இந்துமாமன்றம் தெரிவிப்பு
நண்பர்களாலும் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட அரசியல் வாதி அநுரா பண்டாரநாயக்க
திருமலையிலிருந்து இடம்பெயர்ந்தோரில் மேலும் 138 குடும்பங்கள் மீளக்குடியேறும்
மேல் மாகாண ஆளுநரின் கட்டாய விடுமுறை உத்தரவுக்கு எதிராக மாநகர ஆணையாளர் மனு
`டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம்
எம்.பி.க்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்துகிறது அரசு
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாதென பொறுப்புள்ள அமைச்சர் கூறுவது நியாயமா?
மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறும் அரசு ஆட்சிப் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைப்பது சிறந்தது
இனவாத அரசியல் தலைவர்களால் தமிழ் வஞ்சிக்கப்பட்டதன் விளைவையே இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com