Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
போட்டியிடாவிடினும் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே
[20 - March - 2008] [Font Size - A - A - A]
* சுட்டிக்காட்டுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரச பயங்கரவாதமும், ஆயுதக் குழுக்களுமே பெரும் சவாலாக அமையுமென தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிட்டாலும் தமிழ் மக்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு அக்கட்சிக்கு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி எம்.பி.கருத்துத் தெரிவிக்கையில்;

மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளும் தமக்கு சாதகமாக அமையுமென அரசாங்கம் பகல் கனவு காணுகிறது. எனினும் இப்பகல் கனவு பலிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் இடமளிக்கப்போவதில்லை.

அரச பயங்கரவாதமும், ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனமும் நீதி, நியாயமிக்க தேர்தலுக்கு மிகப்பெரும் சவாலாக அமையும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இது குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.

மாகாண அதிகாரம் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை ஒரு போதும் பூர்த்தி செய்யாவிட்டாலும் அவ்வதிகாரத்தை சிங்களப் பேரினவாதிகள் அபகரிப்பதை ஏற்க முடியாது. எனவேதான் அதாவது சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே நாம் இத்தேர்தலில் குதிக்கத் தீர்மானித்தோம்.

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமை அவர்களின் தனிப்பட்ட முடிவென்றாலும் அவர்கள் ஜனநாயக கட்சி என்ற வகையில் மாகாண தமிழ் மக்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு கூட்டமைப்புக்குண்டு. இல்லையேல் தமிழ் மக்களின் பெறுமதியான வாக்குகள் சூறையாடப்படும் நிலையேற்படும்.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்த தீவிர கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமையும் மட்டக்களப்பு, திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

இதன் பின்னர் எமது கட்சியின் நிலைப்பாடு வெளிவரும். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு மேற்கொள்வது குறித்து ஆராயவும் முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவேயுள்ளது என்றார்.

Email this page Your Opinion Print this page
ஆர்தர் சி கிளார்க் காலமானார்
காணாமல் போதல்; வெளிவிவகார அமைச்சை சாடுகிறது ஐ.சி.ஆர்.சி.
பாரிய கூட்டணியில் மு.கா. வை இணைத்து கிழக்கில் களமிறங்க ஐ.ம.சு.மு. தீவிர முயற்சி
போட்டியிடாவிடினும் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே
ஆளும் கூட்டணியில் த.ம.வி.பு.வை இணைக்க முஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள் ஆட்சேபனை
கிழக்கு மாகாண தேர்தல் போட்டி குறித்து இன்று தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும்மழை மண்சரிவு அபாயம்; இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்கும்
கொள்ளுப்பிட்டி வீதி விபத்தில் 2 விமானப் படையினர் காயம்
சீன அரசாங்கத்தின் இலங்கைக்கான உதவிகள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு குறித்து அறிவுறுத்தல்
பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் படுகொலைகள் எவ்வாறு இடம்பெற்றன
டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி பெண் உட்பட இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
ரூபவாஹினிக்கு எதிரான வழக்கில் இணக்கத்துக்கு வர காதர் எம்.பி.சம்மதம்
விஷேட அதிரடிப்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கேள்விகள் நீதியற்றவை
உயிர்த்த ஞாயிறு தினம் யாழில் ஊரடங்கு நீக்கம்
மீளக் குடியமர விரும்புவோரை உறுதிகளை சமர்ப்பிக்க கோரிக்கை
கொழும்பு, மட்டக்களப்பில் இரு பெண்களை காணவில்லை
மயிலவெட்டுவான், செங்கலடி பிரதேசங்களை மக்கள் சென்று பார்வையிட ஏற்பாடு
உலகு எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு நபிகளாரின் போதனைகளில் தீர்வுண்டு
சகல இனத்தாருடனும் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைத்து முஸ்லிம்களும் உறுதி பூணவேண்டும்
மட்டக்களப்பில் அடைமழையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க கோரிக்கை
பேரியல் அஷ்ரப்பின் மீலாதுன் நபி வாழ்த்து
சித்திரை மாதப்பிறப்பே புத்தாண்டு அகில இலங்கை இந்துமாமன்றம் தெரிவிப்பு
நண்பர்களாலும் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட அரசியல் வாதி அநுரா பண்டாரநாயக்க
திருமலையிலிருந்து இடம்பெயர்ந்தோரில் மேலும் 138 குடும்பங்கள் மீளக்குடியேறும்
மேல் மாகாண ஆளுநரின் கட்டாய விடுமுறை உத்தரவுக்கு எதிராக மாநகர ஆணையாளர் மனு
`டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம்
எம்.பி.க்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்துகிறது அரசு
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாதென பொறுப்புள்ள அமைச்சர் கூறுவது நியாயமா?
மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறும் அரசு ஆட்சிப் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைப்பது சிறந்தது
இனவாத அரசியல் தலைவர்களால் தமிழ் வஞ்சிக்கப்பட்டதன் விளைவையே இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com