Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாரிய கூட்டணியில் மு.கா. வை இணைத்து கிழக்கில் களமிறங்க ஐ.ம.சு.மு. தீவிர முயற்சி
[20 - March - 2008] [Font Size - A - A - A]
* ஹக்கீமுடன் பசில் பேச்சுவார்த்தை

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பாரிய கூட்டணி அமைத்து களமிறங்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அழைப்பு விடுத்திருப்பதுடன் பதிலளிக்க இருநாள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது.

்முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து சாதகமான சமிக்ஞையை இது தொடர்பாக ஆளும் தரப்பு எதிர்ப்பார்த்திருக்கின்ற போதும் அனுகூலமான பதில் வெளிப்படுத்தப்படாதென்றே அறிய வருகிறது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான அரசாங்கத் தரப்புக்கும் இடையில் முக்கியமான பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுமாறு முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்புக் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஏனைய முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் அழைப்பு குறித்து உடனடியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதன் போது பதிலளிக்காவிட்டாலும் அடுத்து வரும் தினங்களில் அரசாங்கத்தின் அழைப்பை நிராகரிக்குமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும் அவர்களிடமிருந்து சாதகமான சமிக்ஞை வெளிப்படுமென எதிர்பார்த்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பில் உறுதியான நம்பிக்கை வெளியிடப்பட்டது.

அரசாங்கத் தரப்பானது கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்துவது, அவர் எந்த சமூகம் சார்ந்தவர் போன்ற தீர்மானங்களை இதுவரை மேற்கொள்ளவில்லையென பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.

இதேசமயம், அரசாங்க ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகளின் முக்கிய கூட்டமொன்றும் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய பல அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். மற்றுமொரு கூட்டத்தை அடுத்தவாரம் நடத்தவும் இதன் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய கூட்டணி அமைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட காத்திருக்கும் ஆளும் தரப்பானது ஏனைய பங்காளிக் கட்சி களிடமிருந்து ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்படுதல், நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள கடும் போக்காளருடனான உறவு என்பவற்றில் முரண்பாடுகளை எதிர் நோக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ஆர்தர் சி கிளார்க் காலமானார்
காணாமல் போதல்; வெளிவிவகார அமைச்சை சாடுகிறது ஐ.சி.ஆர்.சி.
பாரிய கூட்டணியில் மு.கா. வை இணைத்து கிழக்கில் களமிறங்க ஐ.ம.சு.மு. தீவிர முயற்சி
போட்டியிடாவிடினும் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே
ஆளும் கூட்டணியில் த.ம.வி.பு.வை இணைக்க முஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள் ஆட்சேபனை
கிழக்கு மாகாண தேர்தல் போட்டி குறித்து இன்று தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும்மழை மண்சரிவு அபாயம்; இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்கும்
கொள்ளுப்பிட்டி வீதி விபத்தில் 2 விமானப் படையினர் காயம்
சீன அரசாங்கத்தின் இலங்கைக்கான உதவிகள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு குறித்து அறிவுறுத்தல்
பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் படுகொலைகள் எவ்வாறு இடம்பெற்றன
டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி பெண் உட்பட இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
ரூபவாஹினிக்கு எதிரான வழக்கில் இணக்கத்துக்கு வர காதர் எம்.பி.சம்மதம்
விஷேட அதிரடிப்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கேள்விகள் நீதியற்றவை
உயிர்த்த ஞாயிறு தினம் யாழில் ஊரடங்கு நீக்கம்
மீளக் குடியமர விரும்புவோரை உறுதிகளை சமர்ப்பிக்க கோரிக்கை
கொழும்பு, மட்டக்களப்பில் இரு பெண்களை காணவில்லை
மயிலவெட்டுவான், செங்கலடி பிரதேசங்களை மக்கள் சென்று பார்வையிட ஏற்பாடு
உலகு எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு நபிகளாரின் போதனைகளில் தீர்வுண்டு
சகல இனத்தாருடனும் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைத்து முஸ்லிம்களும் உறுதி பூணவேண்டும்
மட்டக்களப்பில் அடைமழையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க கோரிக்கை
பேரியல் அஷ்ரப்பின் மீலாதுன் நபி வாழ்த்து
சித்திரை மாதப்பிறப்பே புத்தாண்டு அகில இலங்கை இந்துமாமன்றம் தெரிவிப்பு
நண்பர்களாலும் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட அரசியல் வாதி அநுரா பண்டாரநாயக்க
திருமலையிலிருந்து இடம்பெயர்ந்தோரில் மேலும் 138 குடும்பங்கள் மீளக்குடியேறும்
மேல் மாகாண ஆளுநரின் கட்டாய விடுமுறை உத்தரவுக்கு எதிராக மாநகர ஆணையாளர் மனு
`டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம்
எம்.பி.க்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்துகிறது அரசு
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாதென பொறுப்புள்ள அமைச்சர் கூறுவது நியாயமா?
மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறும் அரசு ஆட்சிப் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைப்பது சிறந்தது
இனவாத அரசியல் தலைவர்களால் தமிழ் வஞ்சிக்கப்பட்டதன் விளைவையே இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com