Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
காணாமல் போதல்; வெளிவிவகார அமைச்சை சாடுகிறது ஐ.சி.ஆர்.சி.
[20 - March - 2008] [Font Size - A - A - A]
பலவந்தமாக ஆட்கள் காணாமல் போதல் தொடர்பாக இரகசியமான முறையில் தனது அமைப்பு மேற்கொண்ட கண்டு பிடிப்புகளை தனது அறிக்கையில் தவறான முறையில் பயன்படுத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடுமையாக சாடியுள்ளது.

2007 இன் இரண்டாவது, மூன்றாவது காலாண்டுப் பகுதிகளில் காணாமல் போதலும் விளக்கமளிக்கப்படாத கொலைகளும் தாழ்ந்த மட்டத்திற்கு செல்லும் போக்கு காணப்பட்டதாக ஐ.சி.ஆர்.சி. தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சு தனது சமீபத்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த விடயத்தில் அமெரிக்க தூதரகம் ஐ.சி.ஆர்.சி.யின் இரகசியமான அறிக்கையை பெற்றிருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை அதிகாரிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட இரகசியமான அறிக்கையை பகிரங்கப்படுத்தியதையடுத்து ஐ.சி.ஆர்.சி. கவலையடைந்திருக்கிறது. அத்துடன், ஐ.சி.ஆர்.சி.யின் முழுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அரசாங்கத்துடனான அதன் பேச்சு வார்த்தைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பிழையான விபரத்தை தெரிவித்திருப்பதும் கவலைக்குரியதாகும் என்று ஐ.சி.ஆர்.சி. விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

காணாமற் போதல் தொடர்பான அரசாங்கத்தின் கருத்துகளை சீர்ப்படுத்தும் விதத்தில் ஐ.சி.ஆர்.சி.யின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான குழுவின் தலைவர் ஜாக் குயெஸ் டி மெய் யோ தெரிவிக்கையில்;

"இலங்கையில் நீதிவிசாரணைகளுக்கு புறம்பான படுகொலைகளும் காணாமற் போதலும் பயங்கரமான தன்மையாக காணப்படுவதாகவும் இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்" என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நம்பிக்கையான முறையில் நேரடிப் பேச்சு வார்த்தை மூலம் தெரியப்படுத்தியது. இதன் காரணமாக இலங்கையில் காணாமற் போவோர் தொடர்பான எண்ணிக்கையை பகிரங்கப்படுத்தி பகிரங்க விவாதமாக்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஆர்தர் சி கிளார்க் காலமானார்
காணாமல் போதல்; வெளிவிவகார அமைச்சை சாடுகிறது ஐ.சி.ஆர்.சி.
பாரிய கூட்டணியில் மு.கா. வை இணைத்து கிழக்கில் களமிறங்க ஐ.ம.சு.மு. தீவிர முயற்சி
போட்டியிடாவிடினும் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே
ஆளும் கூட்டணியில் த.ம.வி.பு.வை இணைக்க முஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள் ஆட்சேபனை
கிழக்கு மாகாண தேர்தல் போட்டி குறித்து இன்று தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும்மழை மண்சரிவு அபாயம்; இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்கும்
கொள்ளுப்பிட்டி வீதி விபத்தில் 2 விமானப் படையினர் காயம்
சீன அரசாங்கத்தின் இலங்கைக்கான உதவிகள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு குறித்து அறிவுறுத்தல்
பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் படுகொலைகள் எவ்வாறு இடம்பெற்றன
டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி பெண் உட்பட இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
ரூபவாஹினிக்கு எதிரான வழக்கில் இணக்கத்துக்கு வர காதர் எம்.பி.சம்மதம்
விஷேட அதிரடிப்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கேள்விகள் நீதியற்றவை
உயிர்த்த ஞாயிறு தினம் யாழில் ஊரடங்கு நீக்கம்
மீளக் குடியமர விரும்புவோரை உறுதிகளை சமர்ப்பிக்க கோரிக்கை
கொழும்பு, மட்டக்களப்பில் இரு பெண்களை காணவில்லை
மயிலவெட்டுவான், செங்கலடி பிரதேசங்களை மக்கள் சென்று பார்வையிட ஏற்பாடு
உலகு எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு நபிகளாரின் போதனைகளில் தீர்வுண்டு
சகல இனத்தாருடனும் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைத்து முஸ்லிம்களும் உறுதி பூணவேண்டும்
மட்டக்களப்பில் அடைமழையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க கோரிக்கை
பேரியல் அஷ்ரப்பின் மீலாதுன் நபி வாழ்த்து
சித்திரை மாதப்பிறப்பே புத்தாண்டு அகில இலங்கை இந்துமாமன்றம் தெரிவிப்பு
நண்பர்களாலும் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட அரசியல் வாதி அநுரா பண்டாரநாயக்க
திருமலையிலிருந்து இடம்பெயர்ந்தோரில் மேலும் 138 குடும்பங்கள் மீளக்குடியேறும்
மேல் மாகாண ஆளுநரின் கட்டாய விடுமுறை உத்தரவுக்கு எதிராக மாநகர ஆணையாளர் மனு
`டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம்
எம்.பி.க்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்துகிறது அரசு
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாதென பொறுப்புள்ள அமைச்சர் கூறுவது நியாயமா?
மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறும் அரசு ஆட்சிப் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைப்பது சிறந்தது
இனவாத அரசியல் தலைவர்களால் தமிழ் வஞ்சிக்கப்பட்டதன் விளைவையே இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com