ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பினருடனும், ஒசாமா பின்லேடனின் அல்ஹைதா அமைப்பினருடனும் சிறிலங்கா புலிகள் இயக்கத்தினருக்கு மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்ஹைதா இயக்கத்தினருக்கு தற்கொலை குண்டுத் தாக்குல் முறைகளையும், பயிற்சிகளையும், தற்கொலைகுண்டு தாரிகளையும் பிரபாகரனின் புலிகள் இயக்கமே அறிமுகப்படுத்தியதாக மேலும் வெளிநாட்டுப் பத்திரிகைத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தினருடன் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு ஏற்பட்ட தொடர்புகள் பற்றி குறித்த வெளிநாட்டு பத்திரிகை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்புகள் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும். பிரபல புலிகள் இயக்கத்தலைவராகிய குமாரன் பத்மநாதனே முதன்முதலில் இவ்வாறு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார் எனவும் கடந்த 2001ஆம் ஆண்டு மேமாதம் 19ஆம் திகதி மேற்படி பத்மநாதன் தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிலிருந்து பாகிஸ்தான் சென்று பின் கராச்சியிலிருந்து ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்குச் சென்றார் எனவும் பின்னர் அங்கு தலிபான் இயக்கத்தினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பதும் சம்பந்தப்பட்ட தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு பிரான்சில் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டுவந்த லோரன்ஸ் திலகர் எனப்படும் பிரபல புலிகள் இயக்கத்தலைவரே முதன்முதலில் பிரபல முஸ்லிம் இயக்கமாகிய குர்திஷ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் எனவும் இவ்வாறு இவர் பிரான்சிலிருந்த குர்திஷ் குழுவினருடன் 1990 ஏப்ரல் 5ஆம் திகதி முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார் எனவும் குறித்த வெளிநாட்டுச் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே குறிப்பிட்ட இயக்கங்கள் மூலமாக சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி புலிகள் இயக்கம் விமானங்களைத் தாக்கி அழிக்கும் 11 மிசைல் ஏவுகனைகளையும் விலைகொடுத்து வாங்கியதாக மேலும் குறித்த செய்தித்தாள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 16/03/2008