ஐ.சி.சி.யின், புதிய தலைமை செயல் அதிகாரியாக தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த இம்தியாஸ் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரியாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மால்கம் ஸ்பீட் நீண்ட காலமாக இருக்கிறார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.
ஐ.சி.சி.யில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவிக்கு தென்ஆபிரிக்காவின் `சுப்பஸ்போர்ட்' ஒளிபரப்பு நிர்வாகி இம்தியாஸ் பட்டேல், இந்திய கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா ஆகியோர்டையே போட்டி நிலவியது. புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்க, டுபாயில் நடந்த ஐ.சி.சி.நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஐ.சி.சி.யில் இந்தியாவின் பிடி இறுகி வருவதாக மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2010 ஆம் ஆண்டு ஐ.சி.சி.தலைவராக சரத்பவரை நியமிக்க ஏற்கனவே உடன்பாடு செய்யப்பட்டுள்ள சூழலில், இன்னொரு பொறுப்பையும் இந்தியருக்கு வழங்கினால் மேலும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு, மற்ற நாடுகளை திருப்திப்படுத்தும் விதமாக புதிய தலைமை செயல் அதிகாரியாக இம்தியாஸ் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிந்த்ராவுக்கு ஐ.சி.சி.முதன்மை ஆலோசகர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஐ.சி.சி.புதிய செயல் அதிகாரியாகத் தேர்வாகியுள்ள இம்தியாஸ் பட்டேல், கிரிக்கெட் பணிக்கு வருவதற்கு முன் அடிப்படையில் ஒரு ஆசிரியர் அவர் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த வாய்ப்பை இன்னும் இம்தியாஸ் பட்டேல், கிரிக்கெட் பணிக்கு வருவதற்கு முன் அடிப்படையில் ஒரு ஆசிரியர் அவர் தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த வாய்ப்பை இன்னும் இம்தியாஸ் ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி வருகிற வாரங்களில் மிகவும் கவனமாக பரிசீலித்து முடிவு செய்வேன்' என்று இம் தியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.