Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள பின்லேடனின் புதிய ஒலிநாடா
[21 - March - 2008] [Font Size - A - A - A]
முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான கேலிச் சித்திரங்களை மீளப் பிரசுரித்தமை தொடர்பில் அல்-ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய ஒலிநாடா அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

அண்மையில் டென்மார்க் பத்திரிகைகளில் மீளவும் இக் கேலிச் சித்திரங்கள் பிரசுரிக்கப்பட்டமையானது பரிசுத்த பாப்பரசர் பதினாறாவது ஆசீர்வாதப்பரின் சிலுவைப் போரின் ஒரு அங்கமென இவ் ஒலி நாடாவில் ஒலிக்கும் குரல் குற்றஞ்சாட்டியுள்ளது.

முகமது நபி தனது தலைப்பாகையில் வைத்திருப்பதைக் குறிக்கும் கேலிச் சித்திரங்கள் முதன் முதலில் 2005 இல் டென்மார்க் பத்திரிகையொன்றில் பிரசுரமானமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவ் ஒலி நாடாவில் ஒலிக்கும் குரல் பின்லேடனுடையது தானா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈராக் மீதான அமெரிக்க முற்றுகையின் ஐந்தாண்டு நிறைவையொட்டியே இவ் ஒலிநாடா வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், முகமது நபியின் பிறந்த தினத்தை முன்னிட்டே இது வெளியிடப்பட்டுள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக அல்-ஹைடாவின் செய்திகளைக் காவிவரும் இஸ்லாமிய போராளிகள் இணையத்தளமொன்றிலேயே இவ் ஒலிநாடா வெளியிடப்பட்டுள்ளது.

இவ் ஒலிநாடாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இஸ்லாமியர்களை அவமதிக்கும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் மூலம் ஐரோப்பியர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டமானதும் ஆபத்தானதுமாகும். உங்கள் சொற்களுக்கான சுதந்திரத்தை சரிபார்க்கா விட்டால் பின்னர் எங்களின் தாக்குதலுக்கான சுதந்திரத்திற்காகவும் உங்களின் இதயங்களை திறந்து வைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இச் செய்தி எப்போது பதிவு செய்யப்பட்டதென்பது இதுவரை தெளிவாகவில்லை.

பின்லேடனின் கடைசி ஒலிநாடா கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

2005 செப்டெம்பரில் முதன்முதலாக டென்மார்க் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இக் கேலிச் சித்திரங்கள் 2006 இலும் ஏனைய நாடுகளின் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதுடன் கடந்த மாதம் இதன் சில பகுதிகள் டென்மார்க்கின் முன்னாள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள பின்லேடனின் புதிய ஒலிநாடா
ஈராக் போருக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 200 பேர் அமெரிக்காவில் கைது
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால் ஈரான் அமெரிக்காவை தாக்க முயற்சிக்கும்
பிரதமர் பதவிக்கு பாஹிம் போட்டியிடுவதால் பாகிஸ்தான் பிரதமர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறிநிலை
மிச்சிக்கன் மாநிலத்தில் மீளவும் தேர்தலை நடத்துமாறு ஹிலாரி கோரிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com