Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆப்கானின் பிரதான சிறைச்சாலை இராணுவத்தினரால் மூடப்பட்டது
[21 - March - 2008] [Font Size - A - A - A]
ஆப்கானிஸ்தானின் பிரதான சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து இராணுவத்தினர் அச் சிறைச்சாலையை மூடியுள்ளனர்.

1970 களில் தலைநகர் காபூலின் எல்லைப்புறத்தில் அமைக்கப்பட்ட புல்-ஈ- சார்ஹி என்னும் இந்த மிகப் பெரிய சிறைச்சாலையிலிருந்து துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிது.

அத்துடன் இச் சிறைச்சாலையின் ஒரு பகுதியை கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதுடன் இரண்டு படையினரை பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்- ஹைடா மற்றும் தலிபான் சந்தேக நபர்களையும் அபாயகரமான குற்றவாளிகளையும் அடைப்பற்கு இச் சிறைச் சாலை பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கான் படையினருக்கும் சிறைக்கைதிகளுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் தற்போது தீவிரமடைந்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சிறைச்சாலையைச் சுற்றி அதிகளவான பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கைதிகள், அதிகரிகளுக்கெதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளின் மூலமாக பி.பி.சி.யுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ள கைதிகள் தம்மில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாம் இருபடையினரை பிடித்து வைத்திருப்பதாகவும் இந்த சர்ச்சையை தீர்ப்பதற்கான மத்தியஸ்தரை அனுப்பாவிடில் அவர்கள் இருவரையும் கொன்றுவிடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

ஆனால்,அவர்கள் படையினரை தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லாமலிருப்பதாக அங்குள்ள நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஆப்கான் அரசிடமிருந்து எவ்வித தகல்களும் இதுவரை வெளியிடப்படாத போதும் சிறைச்சாலை மீது படை நடவடிக்கையொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு அசைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சிறைச்சாலைக்கு விஜம் மேற்கொண்ட ஆப்கான் எம்.பி. ஒருவர் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஆப்கானின் பிரதான சிறைச்சாலை இராணுவத்தினரால் மூடப்பட்டது
நிலையான சமாதானத்தை காணவேண்டுமென்ற ஆர்தரின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்றும்
முன்னாள் இராணுவ அதிகாரியின் பொறுப்பில் ரூபவாஹினி நிர்வாகம்
அரச தொலைக்காட்சி இராணுவ மயமாகுவதாக உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றச்சாட்டு
பாரிய கூட்டணிக்கு ஐ.ம.சு.வு.க்கு 10 கட்சிகள் இதுவரை ஆதரவு
கிழக்கில் அதிரடிப்படையை வாபஸ் பெறுவதன் மூலம் மற்றொரு வாக்கு கொள்ளைக்கு தயாராகிறது அரசு
மதவாச்சி காட்டினூடாக மன்னாருக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சி
பொலிஸ் சேவையில் அதிரடி மாற்றங்கள் 14 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்
வடபகுதியில் தொடர்ந்து கடும் மோதல்
மாகாண சபை தேர்தல் அறிவிப்பால் மட்டக்களப்பில் தீவிர பாதுகாப்பு
தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு தினத்தில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையளிக்கும் விதத்திலேயே முடிவுகள் அமையும்
ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து குற்றவாளிகள் தப்பினாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது
கிழக்கு மாகாண தேர்தல் குறித்து கூட்டமைப்பு இன்றே முடிவெடுக்கும்
அம்பாறையில் நடைபெற்ற தாக்குதல்களில் ஒரு அதிரடிப்படை வீரர் பலி; 6 பேர் காயம்
இடதுசாரிகள் 3 தமிழ் கட்சிகளுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக சந்திப்பு
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடமேயுள்ளது
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பிரதம இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
குவைத் செல்ல வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வந்த 3 யுவதிகளும் முகவர் நிலையப் பெண்ணும் கைது
காலக்கெடு முடிவதற்கு முன்னரே சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு வெளியேறியமை வருத்தத்திற்குரியது
வாகன விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பு
மெய்ப்பொருளின் அனுபவம் பக்தி தத்துவஞானியின் அனுபவம் சத்தியம்
சிலாபத்தில் திடீர் சோதனை 36 பேர் பொலிஸாரால் கைது
காட்டு யானைகளின் தொல்லை அம்பாறையில் அதிகரிப்பு
கடும் மழையினால் தெல்தோட்டை பாலம் சேதம்
கடத்தப்பட்டவரை விடுவிக்க 2 இலட்சம் ரூபா கப்பம் கற்பிட்டி கடற்படை அதிகாரிக்கும் தொடர்பு?
மாத்தளையில் நேற்று ஐஸ்கட்டி மழை
தொடரும் அடைமழையால் ஆலையடிவேம்பு மரக்கறிச் செய்கையாளர்கள் பாதிப்பு
தமிழ் பாடசாலை இல்லாததால் உக்குவளையில் கல்வி, கலாசாரம் சீரழிவு
பல்கலைக்கழக அனுமதியின் போது இடம் பெயர்ந்தோரையும் கணிப்பிடுமாறு கோரிக்கை
சமாதானம் மலர வேண்டுமென்ற கிளார்க்கின் இறுதி ஆசையை நிறைவேற்ற பாடுபடுவோம்
கெலிஓயா நகரிலிருந்து பூவெலிக்கடை செல்லும் பஸ் சேவை சீரின்மையால் பயணிகள் பெரும் சிரமம்
கிராமசேவகர் இன்மையால் களுதாவளை மக்கள் அவதி
மாத்தளை நகரில் சாப்பு சட்டத்தை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பசறை பலநோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையிலிருந்து காலாவதியான அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு
69 ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டு வரும் கல்விக்கொள்கை விரைவில் மாற்றப்படும்
மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே வங்கிகளின் இலக்கு
கொழும்பு மாவட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் புது வடிவம் பெற வேண்டும்
யுத்தத்தின் மத்தியிலும் நாட்டில் அபிவிருத்தி 2010 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்போம்
சமூகத்தின் அனைத்து கட்டுமானங்களிலும் பெண்கள் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது
அப்புத்தளை தம்பேதன்னையில் காணாமற்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com