கொட்டாஞ்சேனையிலிருந்து புறப்பட்ட பஸ்ஸில் நடத்துநர் கையில் எட்டு ரூபா டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் வழங்கிக் கொண்டிருந்தார்.
ஒரு பயணி எட்டு ரூபாவை நீட்டிக் கொண்டே "எனக்கு டிக்கெட் கட்டணம் ஆறு ரூபாதானே. எட்டு ரூபாவை எப்படி வசூலிக்க முடியும்?" என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார். அத்துடன், அவர் நின்று விடவில்லை.
"ஆறு ரூபாவுக்குப் பதிலாக எட்டு ரூபா வசூலிக்கிறீர்களே. அந்த இரண்டு ரூபா உங்கள் சட்டைப் பையில் போடுவதற்கா? ஆறு ரூபா டிக்கெட் எங்கே போய்விட்டது? சாரதியாரே! இதை நன்றாக அவதானித்துக் கொள்ளுங்கள் உங்கள் பஸ் உரிமையாளரிடம் இதைச் சொல்லுங்கள்" என்று ஒரு அறிவுறுத்தலையும் கொடுத்தார்.
சாரதி புன்னகைத்து விட்டு " அந்த உரிமையாளர் நான் தான்" என்றார்!
பயணிகள் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போய்விட்டனராம்!.