பங்களாதேஷூக்கு அரிசி அனுப்பி உதவி செய்யுமாறு இந்தியாவை உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.
பங்களாதேஷுக்கு அரிசி அனுப்பி உதவுமாறு இந்தியாவைக் கேட்டுக் கொள்ளப்போவதாக உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் நோகி ஒக்னோ வியாழக்கிழமை டாக்காவில் தெரிவித்தார்.
பங்களாதேஸில் உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது. வளர்ந்த நாடுகள் பங்களாதேஷுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து 4 இலட்சம் தொன் அரிசியை இந்தியா பங்களாதேஷுக்கு அனுப்பி உதவ வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 17 ஆம் திகதி 1,869 தொன் அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.