நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் உயிர் அணுமூலம் மருத்துவர்கள் குழந்தையொன்றை உருவாக்கியுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ரொபேர்ட்ஸ். இவர் புற்றுநோய்க்கு 33 வயதில் பலியானார்.
அவரை புற்றுநோய் தாக்கியிருப்பதைக் கண்டறிந்ததும் அவரது மருத்துவர்கள் இந்த நோய்க்கு சிகிச்சை அளித்தால் அவரது உடலில் உள்ள உயிர் அணு சக்தி இழந்து போகும் என்று எச்சரித்தனர். அதனால் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அவர் உடலில் இருந்து உயிர் அணு எடுக்கப்பட்டு அது பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவர் இறந்த துக்கம் மாறும் வரை காத்திருந்த அவர் மனைவி லிசா பாதுகாப்பாக வைக்கப்பட்ட உயிர் அணு மூலம் கருத்தரித்தார்.
இந்த கருத்தரிப்பு மூலம் கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தைக்கு ஜெமி ரோஸ் ரொபேர்ட்ஸ் என அவர் பெயர்சூட்டி இருக்கிறார்.