Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
திபெத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளதை முதல் தடவையாக ஏற்றுக்கொண்டது சீனா
[22 - March - 2008] [Font Size - A - A - A]
திபெத் தலைநகர் லாசாவில் சீனாவுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்திருக்கும் சீன அதிகாரிகள் திபெத்திற்கு வெளிப்புறத்திலும் குழப்பநிலை பரவியுள்ளதை முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் 170 ஆர்ப்பாட்டக்காரர்கள் சரணடைந்துள்ளதாகவும் சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

லாசாவில் அமைதி திரும்பியுள்ள போதும் பாதுகாபபு படையினர் தொடர்ந்தும் அதிகளவில் குவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன ஆட்சிக்கெதிரான திபெத்திய கிளர்ச்சியை நினைவு கூருமுகமாக கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் சீனாவும் திபெத்தும் வெளியிடும் தகவல்கள் ஒன்றுக்கொன்று பெரிதும் வேறுபட்டுள்ளன.

இக் குழப்ப நிலை தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு மேற்குலக செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மோதல்களில் ஈடுபட்டதுடன் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்த 24 பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள திபெத்தின் உத்தியோகபூர்வ நாளேடொன்று இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளது.

170 பேர் சரண் அடைந்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ள போதும் இவ் எண்ணிக்கையினுள் கைது செய்யப்பட்ட 24 பேரும் உள்ளடங்குகின்றனரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

நகர் வழமைக்கு திரும்பும் நடவடிக்கைகளில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அங்கிருக்கும் ஜேர்மனிய செய்தியாளரொருவர் ஆனால் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் வீடுகளில் புகுந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
பாகிஸ்தானின் புதிய பிரதமரை கூட்டணிக் கட்சிகள் இணைந்து தெரிவு செய்யவேண்டும் என்கிறார் பாஹிம்
நேபாளத்தில் தேர்தலுக்கு முன்பான வன்முறைகளில் வேட்பாளர் உட்பட மூவர் பலி
திபெத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளதை முதல் தடவையாக ஏற்றுக்கொண்டது சீனா
4 வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் உயிரணுவிலிருந்து பிறந்த குழந்தை
பங்களாதேஷுக்கு அரிசி அனுப்புமாறு இந்தியாவிடம் உலக வங்கி வலியுறுத்தல்
பிரிட்டனின் குடியுரிமைச் சட்டம் மென்பொருள் ஏற்றுமதிக்குத்தடை
மலேசியாவில் பிறந்த இந்தியருக்கு ஜேர்மனியின் உயர் தேசிய விருது
அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிப்பதாக அச்சம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com