Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
நேபாளத்தில் தேர்தலுக்கு முன்பான வன்முறைகளில் வேட்பாளர் உட்பட மூவர் பலி
[22 - March - 2008] [Font Size - A - A - A]
நேபாளத்தில் தேர்தலுக்கு முன்பு இடம்பெற்று வரும் வன்முறைகளில் இதுவரை வேட்பாளர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி அரசியல் நிர்ணயசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல்நாள் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

நேபாள ஜன்மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ரோப்லா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் மாவட்டத் தலைவர்கள் டீக் பகதூர் புதா மற்றும் பக்டா பகதூர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என சி.பி.என். மாவோயிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரோப்லா மாவட்டம் மாவோயிஸ்ட்டுகள் வலிமையாக உள்ள பகுதியாகும். நேபாளத் தேர்தலை பார்வையிட வந்துள்ள ஐ.நா. முதன்மை கண்காணிப்பாளர் ஜான் முல்டர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்தல் நேர்மையாகவும் , அமைதியாகவும் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இச்சம்பவத்தையடுத்து வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த உட்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதேவேளை, நேபாளத்தில் தேர்தல் நியாயமாக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து உதவிகளும் செய்யப்படும் என நேபாளத்திற்கான இந்தியத்தூதர் சிவசங்கர் முகர்ஜி புதன்கிழமை காத்மண்டுவில் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
பாகிஸ்தானின் புதிய பிரதமரை கூட்டணிக் கட்சிகள் இணைந்து தெரிவு செய்யவேண்டும் என்கிறார் பாஹிம்
நேபாளத்தில் தேர்தலுக்கு முன்பான வன்முறைகளில் வேட்பாளர் உட்பட மூவர் பலி
திபெத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளதை முதல் தடவையாக ஏற்றுக்கொண்டது சீனா
4 வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் உயிரணுவிலிருந்து பிறந்த குழந்தை
பங்களாதேஷுக்கு அரிசி அனுப்புமாறு இந்தியாவிடம் உலக வங்கி வலியுறுத்தல்
பிரிட்டனின் குடியுரிமைச் சட்டம் மென்பொருள் ஏற்றுமதிக்குத்தடை
மலேசியாவில் பிறந்த இந்தியருக்கு ஜேர்மனியின் உயர் தேசிய விருது
அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிப்பதாக அச்சம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com