வருட இறுதியில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக ஆளும்தரப்பு வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
வடக்கில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இத்தீர்மானம் அரசாங்க உயர் வட்டாரத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மடுமாதா தேவாலயத்தை புலிகளிடமிருந்து மீட்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் படைத்தரப்பு விரைவில் அப்பிரதேசத்தை மீட்டுவிடலாமெனவும் நம்பிக்கை கொண்டுள்ளது.
இவ்வாறே மட்டு. உள்ளூராட்சி தேர்தல் போன்று கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் வெற்றியீட்டலாமெனவும் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
மடுதேவாலய வீழ்ச்சியையும் கிழக்கு தேர்தல் வெற்றியையும் பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தலாமென திட்டம் வகுத்துள்ள அரசாங்கம் வரவு- செலவுத் திட்டத்திற்கு முன்னராக பொதுத் தேர்தலை நடத்தவும் எஞ்சியிருக்கும் பகுதிகளை மீட்க மக்கள் ஆணை வழங்கப்பட வேண்டுமென கோரவிருப்பதாகவும் ஆளும்தரப்பு வட்டாரங்களிலிருந்து மேலும் அறியவருகிறது.