தங்காலையில் கடல்கோளால் பாதிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட சுகாதார சேவை அலுவலகத்தை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா திறந்து வைப்பதையும் அருகில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் நிற்பதையும் அலுவலகத்தின் தோற்றத்தையும் இங்கு காணலாம்.
கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் ஷ்ரீ ராமநாம கானாமிர்தம் இசைவேள்வி 2008 நிகழ்வு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போது நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் அரங்கில் மங்கள தீபம் ஏற்றிய திரு.திருமதி. இ.திருவாதிரை ஆகியோருக்கும் சக்ஸபோன் கத்ரி கோபால் நாத்துக்கும் தெ.ஈஸ்வரன், சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதனையும் இசைப் பேரரங்கில் கத்ரி கோபால்நாத் சக்ஸபோன் இசைப்பதினையும் இங்கு காணலாம்.
விஞ்ஞானியும் விஞ்ஞான புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி. கிளார்க்கின் பூதவுடலுக்கு சர்வதேச வை.எம்.எம்.ஏ.தலைவர் அஷ்ரப் ஹுசைன் அஞ்சலி செலுத்துவதை இங்கு காணலாம். ஆர்தர் சி. கிளார்க்கின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.