மூத்த வீரர்கள் சர்ச்சையில் தோனியின் கருத்துக்கு பதான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சென்ற ஒரு நாள் அணியில் கங்குலி, டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதுபற்றி கருத்துக் கூறிய தோனி;
"அவுஸ்திரேலியாவில் ஒருநாள் அணித் தேர்வு சிறப்பாக இருந்தது. மூத்த வீரர்கள் சிலரை நீக்கியது தவறானது இல்லை" என்று கூறினார்.
இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தோனியின் இக்கருத்துக்கு இர்பான் பதான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது;
அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் போது நானாக இருந்தாலும் சரி மற்றவர்களாக இருந்தாலும் சரி மூத்தவர்கள், இளையவர்கள் என்ற பேச்சுக்கு இடம் இல்லை . தகுதி, திறமை அடிப்படையிலேயே தேர்வு நடக்கிறது. தேர்வுக் குழுவில் உள்ள எல்லோரும் ஒத்துக் கொண்டால்தான் தேர்வாக முடியும்.
தோனி மிகச்சிறந்த கப்டன். மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையுடன் ஆட வைக்கிறார். அவர் கொடுத்த உற்சாகத்தில்தான் இந்திய அணி அவுஸ்திரேலியாவில் வெற்றி பெற்றது. குறிப்பாக பந்துவீச்சாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தினார்.