Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
[22 - March - 2008] [Font Size - A - A - A]
ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த போட்டி (2006) நடைபெறவில்லை. இந்தநிலையில், 9 ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூலை 6 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.

பாதுகாப்புக் காரணமாக இந்தப் போட்டி தள்ளிப்போடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 அணிகளும் கலந்து கொள்வதை உறுதி செய்து இருப்பதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் சபைத் தலைமை நிர்வாகி அஷ்ரபுல் ஹூக் அறிவித்துள்ளார்.

இந்தப்போட்டியில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் `ஏ' பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் `பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம்பிடித்து இருக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பிடித்துள்ள அணியுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

இந்தப் போட்டியில் 10 ஆட்டங்கள் கராச்சியிலும் 3 ஆட்டங்கள் லாகூரிலும் நடக்கிறது. அனைத்து ஆட்டங்களும் பகல்- இரவாக நடைபெறுகிறது.

1984 ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் ஆசியக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 4 முறையும், நடப்புச் சம்பியன் இலங்கை 3 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.

Email this page Your Opinion Print this page
2 ஆவது போட்டியிலும் வெற்றி தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்
அணியிலிருந்து விலகிய லாங்வெல்டுக்கு பதிலாக மொன்டே சோன்டெகி இணைப்பு
மூத்த வீரர்களை தோனி சீண்டுகிறார் முன்னாள் கப்டன்கள் ஆவேசம்
ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
பதான் ஆதரவு
வெங்கடேஷ் பிரசாத்,ரொபின் சிங் இரட்டை வேடம் போட முடியாது
எனது அணுகுமுறையில் பெரியளவில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com