இந்திய சுற்றுப்பயணத்துக்கான தென்னாபிரிக்க அணியில் இருந்து விலகிய லாங்வெல்டுக்குப் பதிலாக மொன்டே சோன்டெகி சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான ஸ்மித் தலைமையிலான தென்னாபிரிக்க அணி இன்று சனிக் கிழமை காலை 9 மணிக்குச் சென்னை வருகிறது. இன்று முதல் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையில் அன்ட்ரு நெல்லுக்குப் பதிலாக தென்னாபிரிக்க அணியில் சேர்க்கப்பட்ட லாங்வெல்ட் விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மொன்டே சோன்டெகி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
25 வயதான மொன்டே அண்மைய முதல் தரப் போட்டியில் 62 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்ததால் அணிக்குத் தேர்வு பெற்றுள்ளார். மொன்டே 5 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.