Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
சேதமடைந்த வெப்பம் தாங்கும் ஓடுகளை மாற்றுவது எப்படி?
[23 - March - 2008] [Font Size - A - A - A]
கேப்கானிவரல்:விண்கலத்தில் சேதமடைந்த வெப்பந்தாங்கும் ஓடுகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்வது எப்படி என்பது குறித்து விண்வெளி வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

விண்வெளியில் சரவதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சமீபத்தில் எண்டோபர் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

அதில் சென்ற வீரர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விண்கலத்தில் வெப்பம்தாங்கும் ஓடுகள் சேதமடைந்தால் அதனை சரி செய்வது எப்படி என்பது குறித்த ஒத்திகை முயற்சியில் அவர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர். விண்வெளி வீரர் மைக்கேல் போமேன் விண்வெளி நடைமேற்கொண்டு இந்தப் பரிசோதனை முயற்சியை மேற்கொண்டார். மைக்கேலின் முயற்சிக்கு விண்வெளி வீரர் ரோபர்ட் பேகனும் உதவி புரிந்தார்.

இந்த ஒத்திகை முயற்சிக்காக 2 முறை விண்வெளிநடை மேற்கொள்ளப்பட்டது.

எண்டோவர் விண்கலம் விண்வெளிக்குச் சென்ற 2 ஆவது வாரத்தில் மேற்கொள்ளப்படும் 4 ஆவது விண்வெளி நடை இதுவாகும்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சேதமடைந்த வெப்பம்தாங்கும் ஓடுகளை சரி செய்வது குறித்து நடந்த ஒத்திகை முயற்சி வெற்றி பெற்றதாக நாசா தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
திபெத் கலவரத்தை காரணம் காட்டி சீனாவின் ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்கமாட்டார்
புதிய அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் பாகிஸ்தான் ஜனாதிபதி மீண்டும் கூறுகிறார்
உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் அமெரிக்காவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
சேதமடைந்த வெப்பம் தாங்கும் ஓடுகளை மாற்றுவது எப்படி?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com