Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் அமெரிக்காவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
[23 - March - 2008] [Font Size - A - A - A]
டாக்கா: உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் நாட்டின் இறையாண்மையை மதித்து செயல்படுமாறும் அமெரிக்கத் தூதருக்கு பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பங்களாதேஷில் அண்மைக் காலமாக நடந்துவரும் மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்தல் ஆகியவற்றுக்காக அந்நாட்டுக்கு வெளிநாட்டுத் தூதர்களை ஐ.நா. அமைப்பு அனுப்பிப் பார்வையிடச் செய்கிறது.

அரசியல் தலைவர்களுடன், இந்நிலையில் அண்மையில் பங்களாதேஷ் வந்த அமெரிக்கத் தூதர் கீதா பாஸி, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஷேக் ஹசீனா, முன்னாள் ஜனாதிபதி எர்ஷாத், காலிதா ஷியா உள்ளிட்ட பலருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையும் சந்திப்பும் பங்களாதேஷ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.

பங்களாதேஷுக்கு வரும் வெளிநாட்டுத் தூதர்கள், இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டுத் தூதர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது இருதரப்பு உறவுக்கும் நல்லது. அதைவிடுத்து நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது.

பங்களாதேஷுக்கு எனத் தனி இறையாண்மை உள்ளது. அதை இங்கு வரும் எந்த நாட்டு தூதராக இருந்தாலும் மதிக்க வேண்டும். பங்களாதேஷில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கத் தூதருக்கு வந்ததன் காரணம் என்ன என்பது குறித்து அந்நாடு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷின் இடைக்கால அரசின் ஆலோசகர் இஃப்திகர் சௌத்ரி கூறியதாவது;

அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உள்ளோம். அதை அனைத்து நாடுகளும் மதித்து நடக்க வேண்டும். நட்பு என்பது வேறு... தலையீடு என்பது வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
திபெத் கலவரத்தை காரணம் காட்டி சீனாவின் ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்கமாட்டார்
புதிய அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் பாகிஸ்தான் ஜனாதிபதி மீண்டும் கூறுகிறார்
உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் அமெரிக்காவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
சேதமடைந்த வெப்பம் தாங்கும் ஓடுகளை மாற்றுவது எப்படி?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com