Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பூரண ஆதரவு
[23 - March - 2008] [Font Size - A - A - A]
*மதுரையில் அமைச்சர் ஜெயராஜ்

மதுரை : விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பும் அளித்து வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

பெரிய வெள்ளியை முன்னிட்டு மதுரை புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற விஷேட பிரார்த்தனையில் கலந்துகொண்ட அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே, அதன் பின்னர் அங்கு பத்திரிகையாளர்களுடன் உரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகள் மாறுவேடமணிந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்று விட்டு இலங்கை அரசு மீது பழிபோட்டு வருகின்றனர். இலங்கை அரசு மீது

இந்தியாவுக்கு விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப் புலிகள் இவ்வாறு செயற்படுகின்றனர். அவர்களது இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகானவே இலங்கை அரசு விரும்புகிறது. தமிழர்களில் 95 சதவீதமானோர் சமாதானமாகவே வாழ விரும்புகின்றனர். இதற்காக இலங்கை அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் சமாதானத்திற்கு வர மறுக்கின்றனர். நாட்டை இரண்டாகத் துண்டாடுவதே அவர்களது குறிக்கோளாகும். ஆனால் அது நிறைவேறாது.அரசு அதற்கு ஒருபோதும் இடமளிக்காமாட்டாது.

சமாதானப்பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு எப்போதுமே தயாராகவுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைக்காது நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கவே முயல்கின்றனர்.

2006 இல் ஜெனீவாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசசார்பில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் பேச்சுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அதனை வெற்றிபெறச் செய்வதற்கு அவர்கள் விரும்பாததை நான் நேரில் அவதானித்தேன்.

அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லையென்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைள் குறித்து இந்திய அரசுக்கு நன்கு தெரியும், இதனால் தான் இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்குகிறது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு மாகாண அரசுகள் செயற்படவுள்ளன. கடந்த மாதம் 28 ஆம் திகதி கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அடம்பன் பகுதியில் கடும் மோதல் 3 படையினர் பலி, 11 பேர் காயம்
நாயாறு பகுதியில் விமானத் தாக்குதல்
புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பூரண ஆதரவு
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ஐ.ம.சு.மு பங்காளிகள் கடும் போட்டி
உயிர்த்தெழுந்ததினம் கருணைகாட்டுகின்ற நன்னாள்
சுன்னாகம் கந்தரோடையில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதை கண்டித்து தமிழ் நாடு முழுவதும் மார்ச் 28 இல் ஆர்ப்பாட்டம்
படையினரை அரசு காட்டிக்கொடுத்துள்ளது சிங்கள சம்மேளனம் கண்டனம் தெரிவிப்பு
யாழ், கிளிநொச்சி முஸ்லிம்கள் நலன் கருதி மக்கள் மறுமலர்ச்சி முன்னணி உதயம்
யாழ். மாவட்ட சிறந்த கைத்தொழில் முயற்சியாளர் 34 பேருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
யாழ். குடாநாட்டில் தொடரும் கடும் மழை வெள்ளநீர் தேங்கி பயிர்ச்செய்கை பாதிப்பு
பொன்னாலையில் கடலுணவுகளை சேமிக்கும் சந்தைப்படுத்தல் மூலவள நிலையம் நிர்மாணம்
இராணுவத்தளபதி நேற்று யாழ்.குடாவிற்கு விஜயம்
இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென மத்திய வங்கி அறிவிப்பு
நலிவுற்ற மக்களுக்காக செல்லத்துரை ஆற்றிய பணிகள் செஞ்சிலுவைச்சங்க வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்
ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் தொழில் ரீதியானோர் சம்மேளனம் குற்றச்சாட்டு
மாத்தறை- பிட்டபத்தற தோட்டப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்றவர் கைது
கம்பஹாவில் தேடுதல்; இரு தமிழ் இளைஞர்கள் கைது
கிழக்கு மாகாண நிர்வாகம், வடக்கு ஆலோசனை சபையை ஒரே சமயத்தில் இயங்க வைக்க அரசு நடவடிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு உண்மையான ஈடுபாடு இல்லை
கிழக்கு மாகாண தபால்மூல வாக்களிப்புக்கான இறுதித் திகதி ஏப்ரல் 3 வரை நீடிப்பு
கிழக்கு மாகாண சபை தேர்தல் போட்டி தொடர்பாக செவ்வாய்க்கிழமைக்குப் பின்பே ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கண்காணிப்பை அடுத்தவாரம் ஆரம்பிக்கிறது பவ்ரல்
தீவினையை அதன் சகல வடிவங்களிலும் கைவிட்டு உயர்ந்த வாழ்க்கையை உறுதி செய்வோம்
கிழக்கு ஊடகவியலாளர் குழுவினர் தென் மாகாணத்திற்கு இன்று களப்பயணம்
மின்னல் தாக்கி மேலும் இருவர் பலி
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் கமால்டீன் மீண்டும் பணியில்
சிறுவர் துஷ்பிரயோகம் மோசமாக அதிகரிப்பு முதல் இரண்டு மாதங்களில் 150 முறைப்பாடுகள்
குடாநாட்டில் சனிக்கிழமை ஊரடங்கு சட்டம் நீக்கம்
அவிசாவளையில் கொள்ளையர்களில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை; இருவர் கைது
மட்டக்களப்பில் காணாமற்போன பெண் அங்கொடை ஆஸ்பத்திரி சிறைச்சாலையில்
சிவனொளிபாத மலைக்கு பக்தர்கள் வரவு அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com