மன்னாரில் அடம்பனுக்கு தெற்கே நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் கடும் சமர் நடைபெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சமரில் தங்கள் தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
புலிகள் தரப்பில் 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாமெனத் தெரிய வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.
கடும் ஆட்லறி ஷெல் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியவாறு படையினர் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரென முன்னேறி புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளை தாக்கியழித்துக் கொண்டு முன்னேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலைத் தொடர்ந்து, பாறையனாலங்குளம் பகுதிக்கும் இளந்தைவன் பகுதிக்குமிடையில் சுமார் ஒரு சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.
இந்த மோதல்களில் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டும் 11 பேர் படுகாயமடைந்துமுள்ளனர். புலிகள் தரப்பில் 15 பேர் வரை கொல்லப்பட்டதாகத் தெரியவருவதாகவும் படையினர் கூறியுள்ளனர்.