இந்தியா, தென்னாபிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு போட்டி நடுவராக ரொசான் மகாநாம நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வரும் தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடருக்கு இலங்கையின் முன்னாள் வீரர் மகாநாம தொடர் மத்தியஸ்தராக இருப்பார் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சென்னையில் நடக்கும் முதல் டெஸ்டில் பாகிஸ்தானின் அசத் ராப் மற்றும் நியூசிலாந்தின் டோனி ஹில் நடுவராக இருப்பார்கள். ஆமதாபாத்தில் நடக்கவுள்ள இரண்டாவது போட்டிக்கு டோனி ஹில் மற்றும் ஜமேக்காவில் பில்லி டாக்ட்ரோவ் நடுவராக இருப்பார்கள்.
கான்பூரில் நடக்கும் மூன்றாவது போட்டிக்கு அசத் ராப் மற்றும் டாக்ட்ரோவ் நடுவராகப் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.