கொழும்பு தெற்கில் மழை பெய்து கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி குடையைப் பிடித்துக் கொண்டே பஸ்ஸுக்கு காத்துநின்றார். வேறு சிலரும் பஸ்ஸில் ஏறுவதற்கு நின்று கொண்டிருக்கையில் அவர்களில் ஒருவன் திடீரென அப்பெண்மணியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
பெண்மணி மட்டுமல்லாமல் மற்றவர்களும் கூச்சல் எழுப்பினார்களே தவிர மழையில் நனைந்து கொண்டு அவரைத் துரத்த முற்படவில்லை. முடிச்சு மாறிக்கு மழை வாய்ப்பாகப் போய்விட்டது.
இத்தகவலை அறிந்த ஒருவர் தனது மனைவிக்குக் கண்டிப்பான உத்தரவொன்றைப் போட்டிருக்கிறார். "வெளியே தனியே போவதென்றால் தங்க நகை அணிய வேண்டாம். அப்படி நகை அணிய வேண்டுமென்றால் கவரிங் நகைகளை அணிந்து செல்" இதுதான் அவரின் உத்தரவு.
வருமுன் காப்பது நல்லதுதானே!