Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
தென்கொரியாஅணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
[24 - March - 2008] [Font Size - A - A - A]
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்ற தென்கொரியாவுக்கும்ரஷ்ய ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில்,வடகொரியா அதிகளவில் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்காவும்தென்கொரியாவும் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்தை தற்போது நடந்து வருகிறது.

இதில் வடகொரியாவுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தென்கொரிய வெளியுறவு அமைச்சர் யூ மியாங் - ஹவான் எச்சரித்துள்ளார்.

மூன்று நாள் பெய்ஜிங் பயணத்தின் போது சீன நிருபர்களிடம் பேசிய யூ மியாங் - ஹவான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் புதிய ஆட்சி பதவியேற்க உள்ள நிலையில், அணு ஆயுத விவகார பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் சீனாவும் உதவி செய்ய வேண்டும் என்று தென்கொரிய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
தாய்வானின் புதிய ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வேட்பாளர் மா-யிங்- ஜியோ தெரிவு
நேபாளத்தின் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெப்பநிலை அதிகரிப்பால் ஐஸ்லாந்தின் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம்
தென்கொரியாஅணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com