வத்தேகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை 9 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை வத்தேகம நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், பஸ் நிலையம் என்பவற்றிலேயே பொலிஸார் இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய 5 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டள்ளதாக வத்தேகம பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார்.