Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இலங்கை வெளியேற்றப்படும் நிலையில்
[24 - March - 2008] [Font Size - A - A - A]
ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு (யு.என்.எச்.ஆர்.சி.) விலிருந்து வெளியேற்றப்படக்கூடிய அபாயத்தை இலங்கை எதிர்நோக்கியுள்ளது.

ஆசிய நாடுகளுக்கான அங்கத்துவத்துக்காக எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தல் கடைசியாக 2006 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றது. அப்போதிருந்த தேர்தல் நடைமுறையின்படி ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 192 நாடுகளிடையே நடாத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பில் இலங்கை 125 தொடக்கம் 130 வரையிலான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அங்கத்துவத்தைப் பெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

ஆனால், தற்போது இந்த அங்கத்துவத்தை இழக்கக்கூடிய அபாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ந்தும் இடம்பெறவேண்டுமானால் எதிர்வரும் மேமாத நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள தேர்தலில் இலங்கை வெற்றி பெறவேண்டும்.

இத் தேர்தலில் ஆசிய நாடுகளுக்கான 4 இடங்களில் ஒன்றைப்பெற இலங்கை, ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்.

இவற்றில் முதல் 3 நாடுகளும் ஏற்கனவே அங்கத்துவத்தைப் பெற்றுள்ளன. மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கை அல்லது பஹ்ரெய்ன் வெளியேற்றப்படலாம்.

ஆணைக்குழுவின் புதிய தேர்வு முறைப்படி அங்கத்தவர்கள் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.

அரசியல் வல்லுநர்கள் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், மனித உரிமைகள் உயர் மட்டத்தில் பேணிப் பாதுகாக்கப்படும் நாடே இதற்காகத் தெரிவு செய்யப்படவேண்டும் என்னர்.

இதேவேளை, சில யு.என்.எச்.ஆர்.சி.அங்கத்துவ நாடுகள் இதனைவிட இலங்கைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வழங்குவது தொடர்பாக ஆணைக்குழு மீளாய்வு செய்ய வேண்டுமென ஏகமனதாகத் தெரிவித்துள்ளன.

இத்தேர்தலில் பஹ்ரெய்ன் தோல்வி அடைந்தால் அது இலங்கைக்குச் சாதகமாக அமையும். வாக்களிக்கும் 192 நாடுகளில் குறைந்த பட்சம் தேவையான வாக்குகளை பஹ்ரெய்ன் பெறாவிட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆரம்பத்திலிருந்தே இரகசிய வாக்கெடுப்பு மூலமே இத்தேர்தல் நடைபெறுவதால் எந்த நாடு வெளியேற்றப்படும் என்பதை எதிர்வு கூறுவது கடினமானதாகவே உள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் சகல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒருவாரகாலம் இலங்கையில் தங்கியிருக்கம் இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதுடன் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ள தற்போதைய நிலைமைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளவுள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதிநிதிகளின் விஜயத்தின் பின் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ள தற்போதைய இலங்கை நிலைவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபன்ட் வெளியிடவுள்ள அறிக்கை இலங்கைக்கு பாதகமாகவே அமையுமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
கொழும்பிலிருந்து சென்ற கப்பல் கொல்கத்தா துறைமுகத்துடன் மோதியது
ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இலங்கை வெளியேற்றப்படும் நிலையில்
பேராதனையில் நேற்று தீவிர தேடுதல் பயணிகள், வாகனங்கள் சோதனை
வத்தேகமயில் சுற்றிவளைப்பு 15 பேர் பொலிஸாரால் கைது
மணலாறு, யாழ்.குடா மோதலில் 4 படையினர் பலி; 9 பேர் படுகாயம்
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு வேட்பாளர் தெரிவில் ஐ.தே.க.
வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் பதுளையை சேர்ந்த தமிழ் யுவதி பலி
கொழும்பில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் சோதனையில் பஸ் பயணிகள் பெரும் அவதி
புத்தகாயாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் 24 பேர் காயம்
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கமும் தனியாரும் இணைந்து விஷேட திட்டம்
நிவித்திகலை விபத்துகளில் ஒருவர் பலி, மூவர் காயம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் பலர் பங்கேற்பு
மக்களின் பாதுகாவலனாக விளங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் வியாபாரம் நடத்துகின்றன
கையடக்கத் தொலைபேசி அழைப்பு மன்னாரில் பல மணிநேரம் துண்டிப்பு
10 புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைப்பு
வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்வதை அடுத்தவருடம் முதல் கட்டுப்படுத்த அரசு தீர்மானம்
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும்
வஸ்கமுவ பூங்காவில் இடம்பெற்ற இரட்டைக்கொலை பிரதான சூத்திரதாரி மாவனல்லையில் கைது
பெண்களுடன் தவறாக எவரும் நடக்க முயலவில்லை எழுத்துமூலம் தருமாறு பொலிஸார் வற்புறுத்தல்
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி வழிபாடு
மதவாச்சி ஆஸ்பத்திரியில் மட்டும் தினமும் 3000 நோயாளிகளுக்கு சிறுநீரக சிகிச்சை
இந்தியாவுக்கு அடிபணிந்தே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கும் நோக்கம் எதுவுமில்லை
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இளைஞர் தற்கொலை
ஷிராந்தி ராஜபக்ஷவின் தாயார் காலமானார்
வெள்ளவத்தையில் ஆட்டோ சாரதியான தமிழ் குடும்பஸ்தரைக் காணவில்லை
கோலாலம்பூரில் இலங்கை தமிழ் இளைஞரும் மற்றொருவரும் இனந்தெரியாதோரால் கொலை
தமிழ்நாட்டு மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை குழு விரைவில் இந்தியா பயணம்
லியாம் பொக்ஸ் இலங்கை வருகிறார்
அமைச்சர் செனவிரட்னவின் ஆதரவாளர்கள் இலங்கை மின்சார சபை ஊழியர்களாக நியமனம்
பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாதுகாப்பு விழிப்புக்குழுக்கள் உதவ வேண்டும்
குண்டுவெடிப்பையடுத்து சீருடையில் வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களைத் தாக்கி தரையில் வீழ்த்தி பலதடவைகள் சுட்டனர்
நாவலப்பிட்டியிலுள்ள மூவின மக்களும் போற்றும் வகையில் சேவை செய்வதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன்
வெளிநாடு சென்று பட்டம் பெறும் டாக்டர்கள் நாடு திரும்பி சேவை செய்ய மறுக்கின்றனர்
தொழிலாளர்களின் பொறுப்பற்ற செயலால் குடாநாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கடும் மழையின் மத்தியிலும் நள்ளிரவு ஆராதனையில் மக்கள்
தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கும்பாபிஷேகம் ஏப்ரலில்
வெவஸ்சை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வெடிப்பு
கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்து பொலிஸ் அதிகாரியின் மகன் படுகாயம்
கல்வியே ஒரு தேசத்தின் மிகப் பெரும் செல்வம் அதனை வளர்ப்பவர்கள் போற்றப்பட வேண்டும்
முஸ்லிம் சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்காக அரசியலுக்கு அப்பால் நின்று பாடுபடவேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com