கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தா சென்ற கப்பலொன்று கொல்கத்தா துறைமுகத்தை மோதித் தகர்த்துள்ளது.
இந்தக் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே துறைமுகத்துடன் மோதுண்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படாதபோதும் துறைமுகத்திற்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் மற்றும் கனரக கட்டுமானப் பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு துறைமுகத்துடன் மோதுண்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சென்று கொல்கத்தா துறைமுகத்தின் நூர்பூர் துறைமுகத்துடன் மோதியதில் அங்கு பலத்த சேதமேற்பட்டதாக கொல்கத்தா துறைமுக பணிப்பாளர் ஏ.கே.சந்தா தெரிவித்தார்.
கப்பலில் ஸ்ரறிங் (செலுத்தி) செயற்படாது போதனால் கப்பல் கப்டனுக்கு வேறு வழிதெரியாது கப்பலை துறைமுகத்துடன் மோதி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் இதனால் இறங்குதுறை முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.