 |
| அம்பாறை கதிர்பு நிறுவனம் ஜேர்மன் நாட்டு அனுசரணையுடன் கடற்கோள் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட பாண்டிருப்புக் கடற்கரை வீதியை 15 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜேர்மன் தூதுவர் காரியாலத்தில் நடைபெற்றது. இதில் ஜேர்மன் தூதுவர் யூலியன் வேர்க்- கதிர்பு நிறுவன இணைப்பாளர் க.ஜனககுமாரிடம் ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தை வழங்குவதை காணலாம். |
|
|
|
 |
| உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு கொழும்பு கொட்டாஞ்சேனை சென்.லூசியாஸ் பேராலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வில் உயிர்த்த இயேசுநாதரின் திருச்சொரூபத்தை மக்கள் தொட்டு முத்தி செய்வதையும் திருச்சொரூபம் வீதிவழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படுவதையும் பங்குத்தந்தை திருச்சொரூபத்தினால் மக்களை ஆசீர்வதிப்பதையும் காணலாம். |
|
|
|
 |
| கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களையும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிரஞ்சன் அபேவர்தன அங்கு உரை நிகழ்த்துவதையும் ஏற்பாட்டாளரான சப்.இன்ஸ்பெக்டர் சரத் சந்திர அருகில் நிற்பதையும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதையும் இங்கு காணலாம். |
|
|
|
 |
| இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் உதவிகள் வழங்கிவருவதைக் கண்டித்துசென்னையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தமிழீழவிடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியையும் ஆர்ப்பாட்டக் காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரையும் காணலாம். |
|
|
|
 |
| யாழ்.குடாநாட்டுக்கு சனிக்கிழமை விஜயம்செய்த இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவை பலாலி விமானநிலையத்தில் யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி வரவேற்று அழைத்துச்செல்வதைக் காணலாம். |
|
|
|