மினி உலகக் கிண்ணம் எனப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டெம்பர் 11 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் `ஏ' பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய அணிகளும் `பி' பிரிவில் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் லீக் போட்டியில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு;
திகதி, போட்டி, இடம்
செப்.11 பாகிஸ்தான்- மேற்கிந்தியா- லாகூர்
செப்.12 நியூசிலாந்து- இலங்கை- கராச்சி
செப்.13 அவுஸ்திரேலியா- இந்தியா- லாகூர்
செப்.14 இங்கிலாந்து- இலங்கை- கராச்சி
செப்.15 தென்னாபிரிக்கா- நியூசிலாந்து- ராவல்பிண்டி
செப்.16 மேற்கிந்தியா- இந்தியா- கராச்சி
செப்.17 பாகிஸ்தான்- அவுஸ்திரேலியா- ராவல்பிண்டி
செப்.18 தென்னாபிரிக்கா- இலங்கை- லாகூர்
செப்.19 இங்கிலாந்து- நியூசிலாந்து- ராவல்பிண்டி
செப்.20 பாகிஸ்தான்- இந்தியா- லாகூர்
செப்.21 அவுஸ்திரேலியா- மேற்கிந்தியா- கராச்சி
செப்.21 இங்கிலாந்து- தென்னாபிரிக்கா- ராவல்பிண்டி
செப்.24 முதலாவது அரை இறுதி- கராச்சி
செப்.25 2 ஆவது அரை இறுதி -ராவல்பிண்டி
செப்.28 இறுதிப்போட்டி- லாகூர்