Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் சீனாவுக்கு புதிய சிக்கல் புறக்கணிக்குமாறு உலக நாடுகள் பலவும் கோஷம்
[24 - March - 2008] [Font Size - A - A - A]
திபெத் விவகாரம் தொடர்பாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆகஸ்டில் (8-24) சீனத் தலைநகர் பீஜிங்கில் 29 ஆவது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக முழுவீச்சில் சீனா தயாராகி வருகிறது.

இந்த நேரத்தில் திபெத் பிரச்சினை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திபெத் மற்றும் தாய்வான் அணிகள் சேர்ந்து ஒருங்கிணைந்த சீன அணியாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் என்று சீனா அறிவித்தது.

இது விடுதலை கோரிப் போராடி வரும் திபெத் மக்களிடையே கோபத்தை அதிகரிக்கச் செய்தது. தங்களது மண்ணில் இருந்து சீனா வெளியேற வேண்டுமென சமீபத்தில் மாபெரும் போராட்டம் நடத்தினர். இதனை சீனா வழக்கம் போல் இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. அப்போது நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து, திபெத் உரிமைக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் தலாய்லாமா கண்ணீருடன் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து சீனாவுக்கு பாடம் புகட்ட உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. முதல் கட்டமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளன. குறைந்தபட்சம் தொடக்க விழா நிகழ்ச்சிகளை புறக்கணித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளன.

உலகில் உள்ள மனித உரிமை அமைப்புகள் சீனாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்சில் உள்ள ஆர்.எஸ்.எப்.என்ற அமைப்பு ஒலிம்பிக் உறுதிமொழி எதையும் சீனா கடைப்பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"2001 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை சீனா பெற்றது. அப்போது அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. திபெத்துக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. சீனாவில் பத்திரிகையாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. எனவே உலகத் தலைவர்கள் பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும்" என கேட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
மலிந்த வர்ணபுரவின் சிறப்பான சதத்தால் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள்
பீற்றர்சனின் அபார சதத்தினால் தலைநிமிர்ந்தது இங்கிலாந்து அணி
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் சீனாவுக்கு புதிய சிக்கல் புறக்கணிக்குமாறு உலக நாடுகள் பலவும் கோஷம்
இந்திய அணியின் சவாலை சந்திக்க தயார் தென்ஆபிரிக்க அணித்தலைவர் கூறுகிறார்
மினி உலகக் கிண்ணப் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி
பசிபிக் லைப் ஓப்பன் டெனிஸ் போட்டி பெடரர், நடால், ஷரபோவா தோல்வி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com