இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளிடையே நேப்பியரில் நடைபெறும் 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், வலுவானதொரு நிலையை நோக்கி இங்கிலாந்து அணி செல்கிறது.
முதல் இனிங்ஸில் 253 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணி 2 ஆவது இனிங்ஸில், 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 168 ஓட்டங்களையே பெற்றது.
இங்கிலாந்தின் சைற் பொட்டத்தின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது நியூஸிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்துள்ளனர்.
டெஸ்டில் பீற்றர்சனின் சதம் கைகொடுக்க,இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் ரிம் சவுதீ முதல் போட்டியிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்தும், வெலிங்டனில் நடந்து இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்தது.
மிகவும் எதிர் பார்க்கப்பட்ட மூன்றாவது போட்டி,நேப்பியரில் சனிக்கிழமை தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, முதலிதலில் ஆடியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக குக் மற்றும் கப்டன் மைக்கல் வோகன் களமிறங்கினர். நியூசிலாந்து பந்து வீச்சாளர் சவுதீ வீசிய 4 வது ஓவரில் வோகன் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஸ்ட்ராசும் சவுதீ வீசி 6 வது ஓவரில் டக் அவுட்டாகி வெளியேரினார். அடுத்த ஓவரிலேயே குக் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் பந்தில் கிளீன் போல்டானார்.
இங்கிலாந்து அணி 7 வது ஓவர் முடிவின் போது,7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையிலிருந்து.
9 ஒட்டங்கள் எடுத்த நிலையில் பெல்,இலியாட் பந்தில் வெளியேறினார்.4 விக்கெட்டுக்கு 36 ஒட்டங்களை எடுத்து தடுமாறிய நிலையில்,பீற்றர்சனுடன் ஜோடி சேர்ந்த கொலிங்வூட் பொறுப்பாக விளையாடினார்.இருவரும் 5 வது விக்கெட்டுக்கு 89 ஒட்டங்கள் எடுத்தனர்.
30 ஒட்டங்கள் எடுத்த நிலையில் கொலிங்வூட், படேல் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அம்புரோஸ் 11 ஒட்டங்களில் வெளியேறினார்.
பீற்றர்சனுடன் 7 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பிராட், சிறப்பாக விளையாடினார். இருவரும் சேர்ந்து 61 ஒட்டங்கள் எடுத்தனர். அபாரமாக விளையாடிய பீற்றர்சன் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது இதுவது 11 வத சதம்.129 ஒட்டங்கள் (12 பவுண்டரிகள்,1 சிக்சர்) குவித்த பீற்றர்சன், சவுதீ பந்தில் ஹவ்விடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 240 ஒட்டங்கள் எடுத்தது. பிராட் 42 ஒட்டங்களுடனும், சைற்பொட்டம் 3 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர். நியூசிலாந்து அணிசார்பில் சவுதீ 3 விக் கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
2 ஆம் நாள் ஆட்டத்தில், மேலும் 13 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.
பந்து வீச்சில் சவுதீ -5, பட்டேல் -2, மார்ட்டின் - 2 விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு ஆடிய நியூஸிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 168 ஓட்டங்களையே பெற்றது. சைற் பொட்டம் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நியூஸிலாந்து அணியின் முன்னாள் கப்டனும் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுபவருமான ஸ்ரீபன் பிளமிங் - 59, கௌவ் -44, வெற்றோரி -14 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதையடுத்து 2 ஆவது இனிங்ஸில் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்டம் முடிவடையும் போது, 2 விக்கெட் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் ஸ்ட்ராஸ் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் குக் 37 ஓட்டங்களைப் பெற்றனர்.