வடக்கே கடும் மழை பெய்து வரும் நிலையிலும் அங்கு தினமும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
வவுனியா, மன்னார், மணலாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 15 க்கும் மேற்பட்ட மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல்களில் நான்கு படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நாவற்குளம், கள்ளிக்குளம், பெரியதம்பனை, இராமநாதன்குளம் பகுதிகளில் காலை முதல் மாலை வரை ஏழுக்கும் மேற்பட்ட மோதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
மணலாறு பகுதியிலும் ஜனகபுரவுக்கு வடக்கேயும் கொக்குத் தொடுவாயிலும் கிரிப்பன்வெவ பகுதியிலும் ஏழு மோதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
மன்னாரில் பரவக்குளம், நெடுங்கண்டல் பகுதிகளில் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மோதல்களிலேயே 20 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டது தெரியவருவதாக படையினர் தெரிவித்தனர்.