கிழக்கு மாகாண சபை தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் எழுந்திருக்கும் நிலை, மற்றும் தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமை, வாக்குகளையும், சிறுபான்மையினரின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோருடன் ரவூப் ஹக்கீம், ஹஸன் அலி ஆகியோருடன் மற்றும் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.