Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆர்தர் சி கிளார்க் மீதான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை
[25 - March - 2008] [Font Size - A - A - A]
* தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

கடந்த வாரம் மரணமடைந்த விஞ்ஞானியும் விஞ்ஞானப்புனை கதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க் மீதான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமை ஆர்தர் சி கிளார்க்கின் இறுதிக் கிரியை இடம்பெற்றது. 1956 இலிருந்து அவர் இலங்கையில் வசித்து வந்தார்.

1998 இல் கிளார்க் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இளம் பையன்களுடன் அவர் பாலியல் உறவு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்ததை அவரின் மரணம் தொடர்பான கட்டுரைகளை எழுதியிருந்தோர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லையென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஜகத் வெள்ளவத்தை ஏ.எவ்.பி.க்கு தெரிவித்திருக்கிறார்.

`கிளார்க்கிற்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை. அத்துடன் எவரும் அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், முறைப்படி எந்தவிதமான புகாரும் தெரிவிக்கப்படவில்லை. எவரும் சேர் ஆர்தரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறவுமில்லை என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணையாளர் டபிள்யூ.ரி.டி.விஜயசேன கூறியுள்ளதுடன் வதந்திகளின் அடிப்படையில் நாம் விசாரணை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் ஜனாதிபதி செயலகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னின்று செயற்படும் அமைப்பான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது கிளார்க்கின் நடத்தை தொடர்பாக இன்ரர்போலின் உதவியுடன் விசாரணையை ஆரம்பித்திருந்தது. 1998 இலிருந்து 2-1/2 வருடங்கள் கிளார்க்கின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் பொலிஸார் நேரத்தை செலவிட்டனர். ஆயினும் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் முன் கொண்டுவரப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்த்திருந்த கிளார்க் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த பிரிட்டிஷ் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அச்சுறுத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களால் குழப்பமடைந்திருப்பதாகவும் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட சதியெனவும் கிளார்க் கூறியிருந்தார்.

கிளார்க்கிற்கு `நைற் குட்' பட்டமளிப்பதற்காக இருந்த போதும் அது இரு வருடங்கள் அச்சமயம் பிற்போடப்பட்டது. அச்சமயம் இலங்கைக்கு பிரிட்டிஷ் இளவரசர் வருகை தந்திருந்தார். அப்போது கிளார்க்கிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அதிகளவுக்கு வெளிவந்தன.

கிளார்க்கின் மரணம் தொடர்பாக லண்டனிலிருந்து உத்தியோகபூர்வமாக அனுதாபச் செய்திகள் எவையும் வெளியிடப்படவில்லை. ஆனால், துயரமான நிகழ்வு என்று பிரிட்டிஷ் தூதரகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்தர் மீதான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த சமயம் குரல் கொடுத்த சிறுவர் உரிமை அமைப்புகள் அவரின் மரணத்தையடுத்து அதிகளவு அமைதி காத்து வருகின்றன.

மரணமடைந்தோர் தொடர்பாக தீமையானவற்றை நாம் பேசுவதில்லையென்பது எமது கலாசார நடைமுறையென்று மாற்றுக் கொள்கை நிலையத்தின் பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
ஆர்தர் சி கிளார்க் மீதான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை
கிழக்குத் தேர்தலை ரத்து செய்ய இந்தியாவை தலையிட கோரிக்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
மரச் சின்னத்தில் போட்டியிட்டால் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மு.கா. முன்வருகை
வடக்கே கடும் மழை; மோதல்களும் உக்கிரம்
மு.கா. தனித்து களமிறங்கும் சாத்தியம் ஹக்கீம், ரணில் இன்று அவசர சந்திப்பு
பியகம சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி; மனைவி படுகாயம்
களனி ஆற்றில் மூழ்கிய சிறுமி உட்பட 4 பெண்களில் இருவரது சடலங்கள் மீட்பு
காமன்கூத்தில் மோதல்; சிங்கள இளைஞன் உயிரிழப்பு; தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்
நாட்டின் உண்மை நிலைவரத்தை தெரிவிக்க `மக்கள் சக்தி' படையணி
வெள்ளைவான், வெடிமருந்துவகை கஞ்சிகுடிச்சாறு காட்டில் மீட்பு
சகலரையும் அரவணைத்து எதிர்காலத்திற்கான நம்பிக்கையை கட்டியெழுப்பும் முயற்சியில் அரசு
தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாததே கிழக்கு தேர்தல் அமைதியாக இடம்பெற்றதற்கு காரணம்
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
தகுதியற்றவர்களுக்கு கலாநிதி பட்டம் வழங்கும் சில நிறுவனங்கள்
5 மாவட்டங்களில் அடை மழையால் 17,000 ஹெக்டேயர் வயல்கள் பாதிப்பு; 1,54,000 மக்கள் இடம்பெயர்வு
பருவகாலம் மாறி வவுனியாவில் கனத்த மழை பெய்வதால் பேரழிவு
`திரும்பும் காசோலைகளை மீண்டும் ஏற்றுக்கொள்வதில்லை அனைத்து வங்கிகளும் தீர்மானம்'
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை தூண்டுவதே கட்டண அதிகரிப்பின் நோக்கம்
`அனர்த்தம், நெருக்கடி ஏற்படும் போது சுயமாக சிந்தித்து தீர்வுகாண வேண்டும்'
திருமலையில் 3 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றத்திற்கு தேர்தல் ஆணையாளர் திசாநாயக்கா கண்டனம்
எந்தவொரு பாடசாலைக்கும் 7ஆம் தரத்துக்கான ஆங்கில பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை
கிராம சேவையாளர் இணைப்புக்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் வெளியாகின
நஷ்டஈடு பெற்றுத் தருவதாக கூறி வெள்ளைவானில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்று தடுத்து வைப்பு
திருகோணமலை தாக்குதலை பயங்கரவாதிகளே நடத்தியதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது
இஸ்ரேலில் பிரதமர் விக்கிரமநாயக்கா காஸாவுக்கும் விஜயம் செய்ய திட்டம்
பேலியகொட மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது
எண்ணெய் அகழ்வுக்கு சவூதி உதவுமென்கிறார் பௌசி
சுந்தரபுரம் பம்பைமடுப் பகுதியில் ஒரு இரவில் ஒன்பது வீடுகளில் கொள்ளை
மூன்று மாதங்களில் 47 பேர் கடத்தப்பட்டதாக புகார் பூஸா குற்றத்தடுப்பு பிரிவுகளில் 215 பேர் தடுத்து வைப்பு
யாழ்.இளைஞர் தடுத்துவைப்பு
கிண்ணியா நகரில் புதிய காவலரண்கள்
ஐ.தே.க. தேர்தலில் தனித்து போட்டியிடுவது அவசியம் என்கிறார் காதர் எம்.பி.
தேவஹுவ வைத்தியசாலையை தரமுயர்த்தி மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒன்றுபட்டு போட்டியிடுமாறு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் அறிவுரை
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு இவ்வாண்டு 649 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
இந்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சிக்கு ஷ்ரீ.ல.சு.க. அரசாங்கங்களே வித்திட்டன
அவுஸ்திரேலிய நீச்சல் சாம்பியன் போட்டி புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டெபானி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com