கொழும்பில் ஆடம்பர தொடர்மாடி மனையொன்றை வாங்கிய ஒருவர், வடபகுதியில் வசிக்கும் தனது பாட்டிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.
"நானும் மனைவி, பிள்ளைகளும் வசதியான ஆடம்பரமான வீடொன்றில் இப்போது தங்கியிருக்கிறோம். இது ஒரு தொடர்மாடிக் கட்டிடம் நீங்கள் இங்கு வந்து ஒரு மாதமாவது எங்களுடன் தங்கியிருங்களேன் என்று பேரன் கேட்டுக்கொண்டார்.
பாட்டி வந்து சேர்ந்த பின் அந்த ஆரடம்பர மனையின் பல பகுதிகளையும் நவீன சாதனங்களையும் இவர் காண்பித்தார். குளிரேற்றியினால் அறைகள் எப்போதும் `ஜில்லென்று' இருக்கும் என்று விளக்கினார்.
பாட்டி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, "அது சரி, உனது பிள்ளைகள் ஓடி விளையாட வளவு இல்லையே, அது மட்டுமல்லாமல், வளவில் புல்தரையில் குந்தி இருந்து காற்று வாங்குவதைப்போல் இந்தச் செயற்கையான குளிர்ச்சி இருக்காதே என்றாராம்.
பேரனின் முகத்தில் அசடு வழிந்தது.
இயற்கைக்கு எதுவும் ஈடாகுமோ!