வட - கிழக்கில் பாதுகாப்பு துறைசார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மொழியிலான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மொழிபயிற்சியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சிங்கள மொழி பேசுகின்றவர்களுக்கே வட - கிழக்கில் தமிழ் மொழிமூலமான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டபிள்யூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளை பெறும் அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் விபரங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.