மலேசியாவில் இறந்த வவுனியாவைச் சேர்ந்த இளைஞனின் உடல் இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவமொன்றில், வவுனியா கோவில் புதுக்குளம் 5 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரேம்குமார் என்பவர் உயிரிழந்தார்.
மலேசியாவில் மாடிக் கட்டிடமொன்றில் இவர் தொழில் புரிந்து வந்த போதே கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
இவரது உடலை கொழும்புக்கு கொண்டு வந்து, அங்கிருந்து வவுனியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.