மட்டக்களப்பு வவுணதீவு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சமீபகாலங்களாக யானைகளின் அட்டகாசத்தினால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் பிரதேச மக்கள் ஆளாகி வருவதாக பிரதேச செயலாளர் உருத்திரன் ஸ்ரீதரன் கவலை தெரிவித்துள்ளார்.
போரதீவுப்பற்று 36ஆம், 37ஆம், 38ஆம் கொலனி கிராமங்களுக்கும் விவேகானந்தபுரம் பாலையடிவட்டை ஆகிய பிரதேசங்களிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதத்துக்குள்ளானதுடன், பல ஏக்கர் வேளாண்மைச் செய்கையையும் யானைகள் சேதமாக்கியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 8 வயது சிறுமி ஒருவர் யானை தாக்கி மரணமடைந்ததுடன் ஒரு பெண்ணும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பந்தபபட்ட அதிகாரிகள் யானைகளின் வருகையை கட்டுப்படுத்தாவிடின் தாம் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகவே இருக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.