பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கை நடாத்த கொழும்பு பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இக்கருத்தரங்கு பெல்மடுல்ல, பாத்கட சர்வோதய பயிற்சி நிலையத்தில் இன்றும் நாளையும் (26 ஆம் 27 ஆம் திகதிகளில்) நடைபெறவுள்ளன.
தமிழ்மொழிமூலமாக நடத்தப்படவுள்ள இந்நிகழ்வில், பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த நலன்புரி உத்தியோகத்தர்கள், களப் பணியாளர்கள், சமூகத் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இவ்வதிவிட கருத்தரங்கில் அடிப்படை மனித உரிமைகள், சிறுவர், பெண்கள், தொழிலாளர்களின் நலவுரிமைகள் மற்றும் சுற்றாடல், சுகாதாரம் பேணல் தொடர்பான உரிமைகள், இது தொடர்பில் நாட்டு மக்களின் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள், இடம்பெறவுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இச் செயலமர்வில் வளவாளர்களாக கலந்துகொள்கின்றனர்.