யாழ்மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அரச திணைக்களப் பணியாளர்கள், சர்வதேச, உள்ளூர் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனப் பணியாளர்களுக்கு பயண அனுமதி வழங்குவதற்கு புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் செயலகம் அறிவித்துள்ளது.
புதிய நடைமுறைப்படி சகல திணைக்களத் தலைவர்கள் தமது மாதிரிகையொப்ப பிரதி, அலுவலக நிமித்தம் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பணியாளர்கள் பட்டியல், அதைப்போல அரசசார்பற்ற தொண்டர் நிறுவனப் பணிப்பாளர்கள், பெயர்கள், அனுமதி வழங்கப்பட்ட இணைப்பாளர் கையொப்பம், சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளின் விபரங்களை பலாலி படைத்தலைமையகத்துக்கு யாழ் செயலகம் ஊடாக அனுப்பிவைப்பதன் மூலம் பயண அனுமதியைப் பெறமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பணியாளரும் பலாலி பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே உத்தியோகபூர்வமாக பயண அனுமதியைப் பெற்று பயணங்களை மேற்கொள்ள முடியுமெனவும் யாழ்.செயலகம் அறிவித்துள்ளது.