கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலமொன்றை கண்டிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்ட இச்சடலம் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த உடுவல (வயது 60) என்பவரது சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கண்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவரெனவும் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வைத்தியசாலையிலிருந்து காணாமல்போனவரெனவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.