Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
[26 - March - 2008] [Font Size - A - A - A]
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சின் நிவாரண உதவிகளைப் பெறவென பத்து மாவட்டங்களில் இருந்து 91,194 குடும்பங்களைச் சேர்ந்த 3,81,460 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி அம்பாறை மாவட்டத்தில் 43,846 குடும்பங்களைச் சேர்ந்த 198,218 பேரும் பதுளை மாவட்டத்தில் 385 குடும்பங்களைச் சேர்ந்த 1,622 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,465 குடும்பங்களைச் சேர்ந்த 130,614 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2,036 குடும்பங்களைச் சேர்ந்த 7,781 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேரும் மன்னார் மாவட்டத்தில் 11,033 குடும்பங்களைச் சேர்ந்த 41,320 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 382 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

ஆறு நலன்புரி நிலையங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,870 குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. ஹாலிஎல, ஏறாவூர் நகரம் மண்முனை தெற்கு போன்ற பிரதேசங்களிலேயே இந்த நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் எட்டுப் பேர் மரணித்தும் ஆறு பேர் காயமடைந்துமுள்ளனர். ஹப்புத்தளையில் ஒருவரும் பசறையில் இருவரும் திவுலப்பிட்டியில் மூன்று பேரும் பிபிலையில் இரண்டு பேரும் என எட்டுப்பேர் மரணித்துள்ளனர். பதுளையில் மூன்று பேரும் திவுலப்பிட்டியில் மூன்று பேரும் காயமடைந்துள்ளனர். மேலும், பதுளை மாவட்டத்தில் 14 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 187 வீடுகளும் மொனராகலை மாவட்டத்தில் 19 வீடுகளும் இரத்தினபுரியில் எட்டு வீடுகளுமாக 228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பதுளை மாவட்டத்தில் 139 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 410 வீடுகளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 72 வீடுகளும் மொனராகலை மாவட்டத்தில் 7 வீடுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 9 வீடுகளுமாக 637 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சுமார் ரூபா 71 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட அரச அதிபர்களுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய, அம்பாறை மாவட்டத்திற்கு 650,000 ரூபாவும் பதுளை மாவட்டத்திற்கு 1,102,500 ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 837,692 ரூபாவும் கம்பஹா மாவட்டத்திற்கு 300,000 ரூபாவும் மொனராகலை மாவட்டத்திற்கு 1,170,950 ரூபாவும் புத்தளம் மாவட்டத்திற்கு 84,610 ரூபாவும் மன்னார் மாவட்டத்திற்கு 2,000,000 ரூபாவும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 976,000 ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 11,287 ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்
புல்மோட்டை கடலில் மோதல்
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்
இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் குதிக்க ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதென்ற நம்பிக்கையே அதிரடிப்படை அகற்றப்பட்டதற்குக் காரணம்
கப்பப் பணத்தை பெற வந்தபோது மடக்கிப் பிடித்த பொலிஸார்
10 புலி உறுப்பினர்களின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக வன்னிக்கு
ஐ.சி.ஆர்.சி.யின் வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அநுராதபுரம் முகாம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சிப்பாய் உயிரிழப்பு
`அக்‌ஷன் பாம்' அலுவலக நுழைவாயில் அருகே சென்று உள்ளே பார்த்தபோது சடலங்கள் கிடப்பதைக் கண்டேன்
"மா விலை அதிகரிக்க பிறிமா அனுமதி கோரவில்லை"
20 நாட்களில் 501 புலிகள் பலி
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்கிறது ஐ.நா.
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
பூசா முகாமிலிருந்து நால்வர் விடுதலை வெலிக்கடை சிறைக்கு மேலும் 10 பேர்
யாழ். நுண்கலைப் பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் சரண்
திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு ஏப்ரல் 9 வரை விண்ணப்பிக்கலாம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பயண அனுமதி வழங்க புதிய நடைமுறை அமுல்
பொலிஸ் பிரிவுகளை மக்கள் இனங்காணும் வகையில் விபரங்களடங்கிய பெயர்ப் பலகைகள்
பொதுமகனை மோதிக்கொன்ற இராணுவ கவச வாகனம்; ரூபா 5 இலட்சம் பிணையில் விடுவிப்பு
மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கு
வவுணதீவு, காரைதீவு பிரதேசங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் மக்கள்
மலேசியாவில் இறந்த தமிழ் இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
வட - கிழக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு தமிழ்மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com