இவ்வாண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள் யாவும் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது பிரதேச செயலக அதிகாரியின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கமுடியுமெனவும் அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாண்டுக்கான க.பொ.த. உ/தரப்பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.