மஸ்கெலியாஇலக்கம் தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவு காரணமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
9 முதல் 15 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களுள் 33 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு விஷமடைந்ததாலேயே இந்த மாணவச் சிறுவர்கள் வயிற்றுளைவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.