பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலிருந்தும் காலி பூசா முகாமிலிருந்தும் நேற்று செவ்வாய்க்கிழமை நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் பத்துப்பேர் வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டதாக விடுதலையாகிவந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
1.11.2007 இல் கைதான யசிந்தன் பிரேம் நாத், கொட்டாஞ்சேனையில் 27.09.2007 இல் கைதான தங்கராசா கிஷோர், உசேனியா வீதி லொட்ஜில் 29.09.2008 கைதான கார்த்திகேசு காந்தராசா மாவனெல்லையில் கைதான ரெபேக்கா என்ற பெண் உட்பட நால்வரே கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர வேறு 10 பேர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் விடுதலையானவர்கள் தெரிவித்தனர்.