மன்னார் மோதலில் உயிரிழந்து மன்னார் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் பத்து உடல்கள் நேற்றுக் காலை வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் 22 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தாகக் கூறி 6 பெண் புலி உறுப்பினர்களதும் 4 ஆண் புலி உறுப்பினர்களினதும் உடல்கள் படையினரால் மன்னார் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.
இவை தொடர்பாக மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், விடுதலைப்புலிகள் இவற்றை உரிமை கோரியதையடுத்து உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக வன்னிக்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து பத்து உடல்களும் நேற்றுக்காலை ஐ.சி.ஆர்.சி.யால் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.